திரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமணம் நடக்க உள்ளதாக இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. வருண்மணியன் வாயை மூடி பேசவும் என்ற படத்தை தயாரித்தவர் தற்போது சித்தார்த் நடிக்கும் காவியத்தலைவன் படத்தை தயாரித்து வருகிறார்.
வருண்மணியனுடன் திரிஷாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இதனை திரிஷா மறுத்தார். திருமண நிச்சயதார்த்தம் என்பது வாழ்க்கையில் முக்கியமான நாள். அது நடக்கும் போது சந்தோஷமாக அறிவிப்பேன் என்றார்.
ஆனால் வருண்மணியனுடன் திரிஷா நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வெளியானதால் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று அவர் சொல்வது உண்மைதானா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. நிச்சயதார்த்தம் நடந்ததை அவர் மறைக்கிறார் என்றும் கூறப்பட்டது. அடுத்த வருடம் மார்ச் மாதம் இருவருக்கும் திருமணத்தை முடிக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திரிஷாவுக்கு வந்த படவாய்ப்புகள் வேறு நடிகைகளுக்கு கைமாறுகின்றன. அத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு வருகிறார். ‘உதயம் என்எச்4’ என்ற படத்தை எடுத்த மணிமாறன் அடுத்து இயக்கும் படத்தில் நடிக்க ஜெய், திரிஷா தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். தற்போது திரிஷாவை நீக்கிவிட்டு சுரபியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் ‘இவன் வேற மாதிரி’, ‘வேலை இல்லா பட்டதாரி’ படங்களில் நடித்தவர்.