March 31, 2023 4:45 am

நடிகர் விஜய் நன்றி தெரிவித்து தமிழக மீனவர்களை காப்பாற்றியபிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்நடிகர் விஜய் நன்றி தெரிவித்து தமிழக மீனவர்களை காப்பாற்றியபிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த எமர்சன், வில்சன், அகஸ்டஸ், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 மீனவர்களுக்கும் கொழும்பு ஐகோர்ட்டு தூக்கு தண்டனை விதித்திருந்தது.

மேற்கண்ட மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற தாங்கள் எடுத்த முயற்சிகளும், ராஜ தந்திரங்களும் மிகுந்த பாராட்டுக்குரியது. 5 மீனவர்களின் விடுதலையால் 5 குடும்பங்கள் மட்டும் சந்தோஷமடையவில்லை. ஒட்டுமொத்த தமிழகமே சந்தோஷம் அடைந்துள்ளது.

தினசரி கடலுக்குள் சென்று மீன் கிடைத்தால் மட்டுமே வாழ்க்கை என்று போராடுபவர்கள் மீனவர்கள். இப்படி தினம் தினம் வாழ்க்கையுடன் போராடும் மீனவர்களுக்கு இப்படி தேவையற்ற தொந்தரவுகள் மேலும் பயத்தையும், அச்சுறுத்தலையும் தரும்.

இந்த சமூக மக்கள் இனி வருங்காலத்திலாவது பயமின்றி நிம்மதியாக தொழில் செய்ய தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தித்தர தாங்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று இதன்மூலம் வேண்டுகோள் வைக்கிறேன்.

இவ்வாறு நடிகர் விஜய் கூறியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்