பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதநாயாகனாக நடிக்கும் படம் ‘‘துணை முதல்வர்’’.
இதில் ஜெயராமும் இன்னொரு நாயகனாக வருகிறார். ஸ்வேதாமேனன் நாயகியாக நடிக்கிறார். ரா.விவேகானந்தன் டைரக்டு செய்கிறார். ஆர்.சங்கர், கே.ஜி.சுரேஷ்பாபு தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா இன்று காலை ‘சத்யம்’ தியேட்டரில் நடந்தது. இதில் முன்னாள் கதாநாயகிகள் மீனா, ஊர்வசி, ரோகிணி, சுகாசினி, ராதிகா, ரேகா, ஸ்ரீப்ரியா, பூர்ணிமா, வடிவுக்கரசி, கோவை சரளா ஆகிய பத்து பேர் பங்கேற்றனர். அவர்களே பாடல் சி.டி.யையும் வெளியிட்டனர்.
டைரக்டர் பாண்டியராஜன் விழாவில் பங்கேற்று பேசும்போது, ‘‘சினிமாவில் ஆரம்ப காலத்தில் சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்டப்பட்டேன். அதன் பிறகு பாக்யராஜ் மூலம் வளர்ந்து பெரிய ஆளானேன் என்றார். ஊர்வசி பேசும் போது, சினிமாவில் நடிக்க தெரியாமல் இருந்த எனக்கு நடிப்பு சொல்லி கொடுத்து நடிகையாக்கிய குரு பாக்யராஜ் என்றார்.
டைரக்டர்கள் பார்த்திபன், ஆர்.கே.செல்வமணி ஆகியோரும் விழாவில் பங்கேற்று பேசினார்கள்