நடிகை தேவயானி ‘தொட்டா சினுங்கி’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தொடர்ந்து காதல் கோட்டை, ப்ரண்ட்ஸ், பஞ்ச தந்திரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். 2001–ம் ஆண்டு இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு படங்களில் வாய்ப்பு குறைந்ததால் சின்னத் திரையில் கவனம் செலுத்தி வந்தார். வெள்ளித்திரையை போல் சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்தார்.
பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும அதிகம் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் தேவயானி தற்போது கான்வெண்ட் ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சிறுவயதாக இருந்த போது ஆசிரியராக வேண்டும் என்று ஆர்வம் உண்டு. இதனால் ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்தேன். பின் ஒரு நாள் என் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலேயே ஆசிரியையாக வேண்டும் என்று எண்ணினேன்.
இதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியரிடம் பேசும் போது அவர்களும் சம்மதித்து விட்டனர். தற்போது என் அரவணைப்பில் 45 குழந்தைகள் உள்ளனர். இந்த சேவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது என கூறியுள்ளார். தேவயானி இப்படிக் கூறினாலும் குடும்பக் கஷ்டத்தினால்தான் இவர் ஆசிரியர் வேலைச் செய்வதாகப் பலர் கூறி வருகின்றனர்.