March 27, 2023 2:09 am

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் ‘பூவே உனக்காக’சங்கீதா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் ‘பூவே உனக்காக’சங்கீதா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழில் ‘பூவே உனக்காக’, ‘கங்கா கௌரி’, ‘சீதனம்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை சங்கீதா. மலையாள வரவான இவர், ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழ் மட்டுமில்லாது மலையாள படங்களிலும் நடித்துள்ள இவருக்கு மீண்டும் மலையாள திரையுலகமே கைகொடுத்திருக்கிறது.

மலையாளத்தில் நடிகரும், திரைக்கதையாசிரியரும், இயக்குனருமான சீனிவாசன் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஷிபு பாலன் என்பவர் இயக்குகிறார்.

சீனிவாசனும், சங்கீதாவும் ஏற்கெனவே 1998-வது வருடம் ‘சிந்தாவிஷ்டயாய சியாமளா’ என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்துக்காக சங்கீதாவுக்கு சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருது கிடைத்தது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்