March 20, 2023 9:49 pm

விஜய் 58வது படத்தின் தலைப்பு மறு தீரன்?விஜய் 58வது படத்தின் தலைப்பு மறு தீரன்?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கத்தி படத்திற்கு பிறகு விஜய், இயக்குநர் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் என்பது நமக்கு தெரியும்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் விஜய் கேரியரிலேயே இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக வரவிருக்கிறது. விஜய் தந்தை-மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.

கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கருடா, மதீசன் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அதனை படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் மறுத்தார். இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு ’மறு தீரன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதுகுறித்தும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. சதுரங்கவேட்டை படத்தில் நடித்த நட்டு என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்