March 23, 2023 7:39 am

விஜய் படத்தில் மயிலு நடிகையின் சம்பளம் எவ்வளவு?விஜய் படத்தில் மயிலு நடிகையின் சம்பளம் எவ்வளவு?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

சிம்பு தேவன் இயக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையிலான படங்களாக இருக்கும். முக்கியமாக சமகாலப் படங்களைவிட, பீரியட் பிலிம் இயக்குவதில் ஆர்வம் உள்ளவர். தற்போது விஜய்யை வைத்து அவர் இயக்கும் படமும் கூட பீரியட் பிலிம்தானாம். கத்தி படத்திற்குப் பிறகு இந்தப் படத்திலும் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். இது விஜய் நடிக்கும் 58-வது படமாகும்.

இதில் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரும் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். படத்தில் அவர் ஒரு நாட்டின் ராணியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்காக ஸ்ரீதேவிக்கு ஒரு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள். அதாவது சம்பளமாக ரூ. 5 கோடி பெற்றிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.

படையப்பாவில் ரஜினிகாந்தைப் பார்த்து ‘நீலாம்பரி’ ரம்யா கிருஷ்ணன், ‘உன்னை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது தெரியுமா? வயசானாலும் உன் ஸ்டைல் மட்டும் மாறவே இல்லை’ என்று சொல்வதை அனைவரும் அறிவர். தற்போது அந்த டயலாக் நடிகை ஸ்ரீதேவிக்கும் பொருந்தும். வயசானாலும் கோலிவுட்டில் அவருக்கு இருக்குற மவுசு இன்னும் குறையல என்பதை இதில் இருந்து தெரிந்துகொள்ளலாம். ஆனால் கோலிவுட்டில் தற்போது முன்னியாக இருக்கும் நடிகைக்கு கூட இவ்வளவு பெரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்