March 27, 2023 1:45 am

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சிரஞ்சீவிபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சிரஞ்சீவி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் ஆபேகாம் கிராமத்தைச் சேர்ந்த பாலு என்கிற பத்து வயது சிறுவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் புற்று நோய் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கும் இந்த சிறுவனுக்கு நடிகர் சிரஞ்சீவியை பார்க்க வேண்டும் என்பது கடைசி ஆசையாக இருந்துள்ளது. இதனை மீடியாக்கம் மூலம் தெரிந்துகொண்ட சிரஞ்சீவி நிறைய பரிசுப் பொருட்கள் வாங்கிக்கொண்டு பாலு சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கே சென்று நேற்று அவனை நேரில் சந்தித்தார். சிரஞ்சீவியை கண்டதும் அச்சிறுவன் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறான்.

அதோடு நில்லாமல் அச்சிறுவன் தான் சிரஞ்சிவியுடன் ஆடிப்பாட விரும்புவதாகவும் அப்போது கூறியிருக்கிறான். இதை கேட்ட சிரஞ்சீவி தனது 150–வது படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தார். தொடர்ந்து சிறுவன் மற்றும் அவனது குடும்பத்திற்கு தையரியம் கூறிய சிரஞ்சீவி 20 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ஆகியோர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட தங்களது ரசிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்