March 29, 2023 2:03 am

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா-வெங்கட்பிரபுவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா-வெங்கட்பிரபு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சூர்யா ‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா, ப்ரணிதா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் பிரேம்ஜி, கருணாஸ், ஸ்ரீமன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஆர்.டி.சேகர் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

சூர்யா இரண்டு விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பின்போது சூர்யாவிற்கு அடிபட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியது. மேலும் சமூக வலை தளங்களில் இதைப் பற்றி அதிகம் பேசப்பட்டு வேகமாக பரவியது.

இதையறிந்த வெங்கட் பிரபு, இது வதந்தி என்றும் சூர்யாவிற்கு அடிபடவில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் வதந்தி பரப்பியவர்களுக்கு, ஏன் வதந்திகளை பரப்புகிறீர்கள் நண்பர்களே, நாங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறோம். அனைவருக்கும் ஹாப்பி மாஸ் நியூ இயர் என்றும் கூறி, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்