March 23, 2023 8:57 am

‘லைக்’கில் மீண்டும் சாதனை படைத்த “என்னை அறிந்தால்”‘லைக்’கில் மீண்டும் சாதனை படைத்த “என்னை அறிந்தால்”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

‘என்னை அறிந்தால்’ டீசரைத் தொடர்ந்து தற்போது டிரைலரும் ‘லைக்’கில் சாதனை படைத்து வருகிறது.

அஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் படம் ’என்னை அறிந்தால்’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி புதிய சாதனை ஒன்றை படைத்தது. அதவாது, இந்திய அளவில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்ற பெருமையை பெற்றது. டீசரை மட்டும் இதுவரை 47 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டும், 91 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ‘லைக்’ செய்தும் இருக்கிறார்கள்.

‘லைக்’கைப் பொறுத்தவரை ‘என்னை அறிந்தால்’ டீசர் இந்திய அளவில் 2வது இடத்திலிருக்கிறது. சல்மான் கானின் ‘கிக்’ டிரைலர் 1 லட்சம் ‘லைக்’குடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் என்னை அறிந்தால் டீசரைப் போன்று டிரைலருக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. புத்தாண்டை முன்னைட்டு நள்ளிரவு 12.01க்கு வெளியிடப்பட்ட இந்த டிரைலரை இதுவரை 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டும், 54 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்தும் உள்ளார்கள்.

அதுமட்டுமின்றி, என்னை அறிந்தால் டிரைலர் இந்திய அளவில் யூ டியூப் டீஸர்/டிரைலர் லைக் பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. ‘டாப் 10’ பட்டியலில் இந்திய அளவில் ஐ, என்னை அறிந்தால் மட்டுமே தமிழ்ப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா டீசர்/டிரைலர் யு டியூப் ‘லைக்’கைப் பொறுத்தவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமான ‘லைக்’குகள் வாங்கியிருப்பது ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர், டிரைலர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்