March 26, 2023 10:13 am

வரும் 23ம் தேதி வருண் மணியனுடள் நிச்சயத்தார்த்தம் | டுவிட்டரில் திரிஷா அறிவிப்புவரும் 23ம் தேதி வருண் மணியனுடள் நிச்சயத்தார்த்தம் | டுவிட்டரில் திரிஷா அறிவிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் தாக்குப்பிடிப்பதே அதிகம். ஆனால் திரிஷா, 13 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஹீரோயின் ஆவதற்கு முன் சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், 2002 இல் வெளியான ‘மவுனம் பேசியதே’ மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் திரிஷா. பிறகு ‘சாமி’, ‘லேசா லேசா’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆறு’, ‘கிரீடம்’, ‘குருவி’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘மங்காத்தா’ என பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி, கன்னட திரைப்படங்களில் நடித்து ஒரு முன்னணி ஹீரோயினாக திகழ்கிறார்.

திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திரிஷாவுக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாயின. சமீபத்தில் அவருடன் தனி விமானத்தில் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தார்

இந்த நிலையில்தான் நடிகை த்ரிஷா தன் திருமணச் செய்தியை இன்று அறிவித்துள்ளார். இன்று ட்விட்டரில் அவர் வெளியிட்ட தகவலில், “ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு, வரும் ஜனவரி 23-ம் தேதி வருண் மணியனுடன் எனது திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. இது எங்கள் குடும்பத்துக்குள் நடக்கும் மிகவும் தனிப்பட்ட நிகழ்வு,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்