விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் ‘புலி’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிரார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா நடிக்கின்றனர். இவர்களுடன் முன்னாள கனவுக் கன்னி ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப், தம்பி ராமையா உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் முதன் முறையாக சரித்திர பின்னனிக் கொண்ட கதையில் நடிக்கிறார்.
அதுவும் மாறுபட்ட இரட்டைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இந்தப் படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. புலி படத்தையடுத்து விஜய் ராஜா ராணி இயக்குனர் ‘அட்லி’ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
இப்படத்தில் விஜய் காலேஜ் ஸ்டுடண்ட்டாக நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு விஜய் மெகா ஹிட்டான நண்பன் படத்தில் காலேஜ் ஸ்டுடண்ட்டாக நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அட்லி படத்தில் மீண்டும் காலேஜ் ஸ்டுடண்ட் வேடம் ஏற்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.