March 23, 2023 7:48 am

கிளைமாக்ஸ் மாற்ற மறுத்து அடம் பிடித்த கவுதம் மேனன் | படக்குழு ஷாக்கிளைமாக்ஸ் மாற்ற மறுத்து அடம் பிடித்த கவுதம் மேனன் | படக்குழு ஷாக்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அஜீத் நடிக்க கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘என்னை அறிந்தால்‘ படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்தது. இந்த படம் பொங்கலுக்கு வரலாம் என்று பேசி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் பொங்கலுக்கும் முடியாமல் நாட்கள் தள்ளிக்கொண்டு சென்றது. தற்போது 29ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பற்றி காரசாரமான தகவல் கசிந்துள்ளது. இப்படத்தின் கிளைமாக்ஸ் பற்றி முடிவு செய்யாமல் மற்ற காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டன. கிளைமாக்ஸ் காட்சிக்கான ஷூட்டிங் நடத்த முடிவு செய்யப்பட்டு அது பற்றி அஜீத்திடம் கவுதம்மேனன் விளக்கினார். கிளைமாக்ஸில் அஜீத் இறந்துவிடுவதுபோல் காட்சி அமைத்திருந்தாராம்.

அதைக் கேட்டதும் ஷாக் ஆன அஜீத், இதுபோல் காட்சி வைத்தால் என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அதிருப்தி தெரிவித்தார். ஆனால் இந்த கிளைமாக்ஸ் இருந்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று கவுதம் பிடிவாதம் பிடித்தார். Ôஇந்த படமே அஜீத்தின் தோளில்தான் பயணிக்கிறது. இந்த கதைக்கு அவர் இறப்பதுபோல் கிளைமாக்ஸ் வைத்தால் சரியாக இருக்காது. ‘தளபதி’ படத்தில் ரஜினி இறப்பதுபோல் கிளைமாக்ஸ் வைத்து ரசிகர்கள் ஏற்காததால் அதை மணிரத்னம் மாற்றினார். அதை மறந்துவிட வேண்டாம்’ என படக்குழு தரப்பிலும் கூறப்பட்டதாம். தொடர் தோல்வியால் துவண்ட கவுதமுக்கு கடைசி நேரத்தில் கைகொடுத்தவர் அஜீத். அவரது பேச்சையே கேட்காமல் இப்படி செய்கிறாரே என வினியோகஸ்தர்கள் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்ப, வேறு வழியில்லாமல் பிடிவாதத்தை தளர்த்து  கதைக்கு ஏற்ற கிளைமாக்சை படமாக்கினாராம் கவுதம்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்