March 20, 2023 9:58 pm

2015ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை | உத்தமவில்லன் படத்தில் பணியாற்றிய “கிரீக் மேன்” 2015ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை | உத்தமவில்லன் படத்தில் பணியாற்றிய “கிரீக் மேன்”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கமல் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’.

இப்படத்தை நடிகரும், கமலின் நெருங்கிய நண்பருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். பூஜா குமார், ஆண்ட்ரியா, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்தில் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக லிங்குசாமியும், ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ் சார்பாக கமலஹாசனும் இணைந்து தயாரித்துள்ளனர். ஏற்கெனவே இப்படத்தின் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் ‘உத்தமவில்லன்’ படத்திற்கான இசைக் கோர்ப்பு பணிகளை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படக்குழுவினர் நடத்தி முடித்தனர்.

இப்படத்திற்கு சவுண்ட் ரீ-ரிக்கார்டிங் மிக்சிங்கை செய்த கிரீக் மேன் என்பவர், 2015ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ‘விப்லாஷ்’ என்ற படத்திற்கு சவுண்ட் ரீ-ரிக்கார்டிங் மிக்சிங் செய்தமைக்காக அவர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு உத்தமவில்லன் படக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்