தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக கலைப்புலி எஸ்.தாணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அந்தச் சங்கத்தின் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
2015-2017- ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 84 பேர் போட்டியிட்டனர்.
தலைவர் பதவிக்கு கலைப்புலி தாணு தலைமையிலான அணிக்கும், ஏ.எல்.அழகப்பன் தலைமையிலான அணிக்கும் இடையே போட்டி நிலவியது.
சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கிய தேர்தலில் சரத்குமார், ராதிகா, ராதாரவி, எஸ்.ஏ.சந்திரசேகரன்,
டி.ராஜேந்தர், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.வி.எம்.சரவணன், கே.டி.குஞ்சுமோன், பிரமிட் நடராஜன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர்.
மொத்த வாக்குகள் 978. இதில் 770 வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் கண்காணிப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.