‘மரிக்கார் ஆர்ட்ஸ்’ தமிழில் தயாரிக்கும் முதல் படம் ‘நச்’.
இப்படத்தினை ஹசிம் மரிக்கார் எழுதி, இயக்குகிறார். இதில் ‘அங்காடி தெரு’ மகேஷ், சஞ்சீவ், பிரவீன் பிரேம், மக்பூல் சல்மான் உட்பட 7 பேர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகிகளாக மதுரிமா பானர்ஜி, எதன், பூனம் ஜாவர் உட்பட 5 நடிக்கிறார்கள். மற்றும் ரியாஸ்கான், காளி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இவர்களில் மக்பூல் சல்மான் நடிகர் மம்முட்டியின் அண்ணனும், பிரபல நடிகருமான இப்ராகிம் குட்டியின் மகன் ஆவார். ஏற்கெனவே இவர் 5 மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மக்பூல் சல்மான் நடிக்கும் முதல் படம் இது. மதுரிமா பானர்ஜி விஷாலின் ‘ஆம்பள’ படத்தில் நடித்தவர். மன்சூர் அகமது இதற்கு இசையமைக்கிறார்.
7 கதாநாயகர்கள், 5 கதாநாயகிகள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் துவங்கி கேரளா – கொச்சின், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.