March 20, 2023 9:36 pm

மலையாள இதிகாசா என்ற படத்தில் நடித்த நடிகர் டாம்சாக்கோ கைதுமலையாள இதிகாசா என்ற படத்தில் நடித்த நடிகர் டாம்சாக்கோ கைது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சில நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவு பார்ட்டிகளில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.

இது தொடர்பாக கொச்சி போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் கொச்சி கடுவந்தராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மலையாள நடிகர் டாம்சாக்கோ வீட்டில் போதை பொருள் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.

இன்று அதிகாலை போலீசார் அந்த குடியிருப்பில் அதிரடியாக புகுந்து நடிகர் டாம்சாக்கோ வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 10 கிராம் அளவுக்கு கோகைன் என்ற போதை பொருள் இருந்தது. இது அந்த வீட்டில் இருந்தவர்கள் பயன்படுத்தியது போக மீதி என்று தெரிய வந்தது.

நடிகர் டாம்சாக்கோவுடன் மேலும் 4 இளம்பெண்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர்.

நடிகர் டாம்சாக்கோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இதிகாசா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர். தற்போது மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். அவருடன் கைதான பெண்களில் ஒருவர் சினிமா உதவி டைரக்டராகவும், இன்னொருவர் மாடலாகவும் பணிபுரிகிறார்கள்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்