March 26, 2023 9:41 am

நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சு வார்த்தைநயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சு வார்த்தை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சிம்புதேவன் இயக்கும் புலி படம் முடிந்ததும் விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க தயாரிக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு. இவர் விஜய்யின் துப்பாக்கி படத்தை தயாரித்தவர். அட்லியின் ராஜா ராணி படத்தில் இருந்த அதே டெக்னிக்கல் குழு இந்த படத்திலும் பணியாற்றுகிறது. அந்த வகையில் ராஜா ராணியில் நடித்த நயன்தாரா தான் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தது.

ஆனால் அவர் கால்ஷீட் பிரச்னை காரணமாக படத்தில் நடிக்கவில்லை என்று தகவல் வெளியானது. ஆனால் உண்மை அது இல்லையாம், ஐ பட கதாநாயகி எமி ஜாக்சன் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதால் தான் நயன்தாரா விலகியதாக கிசுகிசுக்கபடுகிறது. இதே பிரச்னை தான் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் மாஸ் படத்திலும் ஏற்பட்டது.

அதில் நயன்தாரா கொடுத்த டார்ச்சரால் தான் எமி ஜாக்சனை படத்திலிருந்து விலக்கியதாகவும் கூறப்படுகிறது. இப்போது நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். இன்றைக்கு சினிமாவில் ஹீரோக்கள் இணைந்து நடிக்க விரும்பினாலும் அதை நாயகிகள் விரும்புவதில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்