March 29, 2023 2:07 am

டைரக்டர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு டைரக்டர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சென்னை சவுகார்பேட்டையச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுன் சந்த் போத்திரா. இவரிடமிருந்து, சினிமா இயக்குனர் கஸ்தூரி ராஜா கடந்த 2012–ம் ஆண்டில் ரூ. 65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக கஸ்தூரி ராஜா இரண்டு காசோலைகளை போத்திராவிடம் கொடுத்துள்ளார்.

இந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கஸ்தூரி ராஜா வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து, அவர் மீது சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போத்திரா காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு மாஜிஸ்திரேட் விரைவு கோர்ட்டில் நீதிபதி கோதண்டராஜ் விசாரணைக்கு வந்தது. அப்போது, கஸ்தூரி ராஜா தரப்பில் யாரும் ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட்டை பிறப்பித்து மாஜிஸ்திரேட் கோதண்டராஜ் உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கு மீண்டும் வரும் 13–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்