விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’.
இப்படத்தை அறிமுக இயக்குனர் சுரேந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சண்முகபாண்டியனுடன் நேகா ஹிங்கே, சுப்ரா ஐயப்பா இரண்டு பேர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ஜெகன், தேவயானி, ரஞ்சித், ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளார். ‘கேப்டன் சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் எல்.கே.சுதீஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா க்ரீன்பார்க் ஓட்டலில் நடைபெற்றது.
விஜயகாந்த் பேசும் போது, “என் மகன் நடிக்க வர வேண்டும் என்று நான் எந்த நிர்ப்பந்தமும் செய்யவில்லை. எந்த அறிவுரைகளும் கூறவில்லை. இந்தக் காலத்து பிள்ளைகளுக்கு நாம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு எல்லாம் தெரியும். நம் தலையெழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும். அதை யாரும் மாற்ற முடியாது. நடிக்க வரும் எல்லாரும் நடிகராக முடியாது கட்சி ஆரம்பிக்கிற எல்லாரும் தலைவராகிவிட முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றி நாமே பெரிதாக பேசிக் கொண்டிருக்கக் கூடாது. மற்றவர்கள் சொல்ல வேண்டும் என்று இவ்வாறு கூறினார்.
விழாவில் நடிகர்கள் பிரபு, விக்ரம்பிரபு, சத்யராஜ், சிபிராஜ், எடிட்டர்மோகன், ஜெயம்ரவி, பி,வாசு, ஷக்தி, சிவகுமார், நெப்போலியன், வாகை சந்திரசேகர், நாசர், பவர்ஸ்டார், ஜெய், கருணாஸ், விமல், விஜயகுமார், சண்முகராஜன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன்,கஸ்தூரிராஜா, ஆர்.கே.செல்வமணி, பார்த்திபன், பாண்டியராஜன், எஸ்.ஏ.சந்திரசேகரன், சுந்தர்.சி, கௌரவ், கங்கை அமரன், கே.எஸ்.ரவிகுமார், மகிழ்திருமேனி, நலன் குமாரசாமி உட்பட ஒட்டுமொத்த திரையுலகினர் கலந்துகொண்டனர்.