March 20, 2023 11:04 pm

ரூ.4.5 கோடி நகைகள் கொள்ளை | நடிகை ரம்பா வீட்டில்ரூ.4.5 கோடி நகைகள் கொள்ளை | நடிகை ரம்பா வீட்டில்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழ் திரையுலகில் 1990-களில் ரம்பா முன்னணி நாயகியாக இருந்தவர் நடிகை ரம்பா. ‘உள்ளத்தை அள்ளித்தா’, சுந்தரபுருஷன், செங் கோட்டை, அருணாசலம், வி.ஐ.பி., காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித் துள்ளார்.

2010-ல் கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் டோரண்டோவில் வசிக்கிறார்.தற்போடி டிவி ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வருகிறார்.

ரம்பாவுக்கு சென்னை யிலும் ஐதராபாத்திலும் வீடுகள் உள்ளன. ஐதராபாத் வீட்டில் தனது நகைகளை பீரோவில் பூட்டி வைத்து இருந்தார். அந்த நகைகள்தான் மாயமாகியுள்ளது. இந்த வீட்டில் ரம்பாவின் அண்ணன் வசிக்கிறார். அவர் வெளியே சென்று இருந்த போது யாரோ வீட்டுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். ரொக்க பணமும் திருட்டு போய் உள்ளது.

இது குறித்து ரம்பா சகோதரர் சீனிவாஸ் போலீசில் புகார் அளித்தார். தனது மனைவி குடும்பத்தினர் நகைகளை திருடி இருக்கலாம் என சந்தேகிப்பதாக புகாரில் தெரிவித்து உள்ளார். புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது தங்கை ரம்பாவின் நகைகளை வீட்டில் வைத்து இருந்தேன். அவற்றை காண வில்லை. கொள்ளை போன நகைகளில் மதிப்பு ரூ.4.5 கோடி ஆகும். நகைகளை என் மனைவி பல்லவி குடும்பத் தினர் திருடி இருக்கலாம் என்று நினைக்கிறேன். பல்லவியுடனும், அவரது குடும்பத்தினருடனும் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஏற்கனவே அவர்கள் ரம்பா மீதும் என் மீதும் பொய் புகார் அளித்து இருந்தனர்.  என்னிடம் ரூ.1 கோடி கேட்டு நிர்பந்தமும் செய்து வந்தார்கள். இந்த நிலையில்தான் ரம்பாவின் நகைகள் காணாமல் போய் உள்ளன.  திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்