March 20, 2023 10:39 pm

லட்சுமிமேனன் | சினிமாவை விட்டு விரைவில் விலக இருக்கிறேன்லட்சுமிமேனன் | சினிமாவை விட்டு விரைவில் விலக இருக்கிறேன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

‘கும்கி’ படம் மூலம் லட்சுமிமேனன் கதாநாயகியாக அறிமுகமானார். 2012–ல் இப்படம் வந்தது. ‘சுந்தரபாண்டியன்’ படம் இவரை மேலும் பிரபலபடுத்தியது. தொடர்ந்து சசிகுமாருடன் ‘குட்டி புலி’, விஷாலுடன் ‘பாண்டியநாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’ விமலுடன் ‘மஞ்சப்பை’, சித்தார்த்துடன் ‘ஜிகர்தண்டா’, படங்களில் நடித்தார்.

தற்போது கார்த்தியுடன் ‘கொம்பன்’, கவுதம் கார்த்திக்குடன் ‘சிப்பாய்’ படங்களில் நடித்து வருகிறார்.

லட்சுமிமேனன் அளித்த பேட்டி வருமாறு:–

நான் சினிமாவை விட்டு விரைவில் விலக இருக்கிறேன். நிறைய படங்களில் கிராமத்து பெண் போன்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் மாதிரியுமான கேரக்டர்களிலேயே நடித்து இருக்கிறேன். அதேபோன்ற வேடங்களில் நடிக்கவே எனக்கு வாய்ப்புகளும் வருகின்றன. இது எனக்கு பிடிக்கவில்லை.

ஒரே மாதிரி வேடங்களில் நடித்து போரடித்து விட்டது. எனவே தான் சினிமாவுக்கு முழுக்கு போடுகிறேன். இனி மேல் படிப்பில் கவனம் செலுத்தப் போகிறேன். தற்போது பிளஸ்–2 படிக்கிறேன். தேர்வில் நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பதே இப்போதைய நோக்கம். கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்க முடிவு செய்துள்ளேன். அதன்பிறகு பேஷன் டிசைனர் ஆவேன்.

இவ்வாறு லட்சுமிமேனன் கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்