பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா. இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நிறைய உள்ளது.
தனியார் விழாக்களிலும் பங்கேற்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
டி.வி.யின் முன்னணி தொகுப்பாளராக இருந்த போதே அர்ச்சனாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. கதாநாயகியாக நடிக்கவும் அழைத்தனர்.
ஆனால் அவர் நடிக்க மறுத்து விட்டார். தற்போது ஷாஜி–கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே. கதாநாயகனாக நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க அர்ச்சனாவை அழைத்தனர். கதையை கேட்ட அர்ச்சனாவுக்கு பிடித்து போனது. நடிக்க சம்மதித்துள்ளார்.
இதில் இனியா நாயகியாக நடிக்கிறார். அவருக்கு அக்காவாக அர்ச்சனா நடிக்கிறார். படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இனி தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் முடிவில் இருக்கிறாராம் அர்ச்சனா.