நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலாக தயாரிக்க உள்ள படத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமந்தாவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாவது, தற்போது சமந்தாவிடம் 4 படங்கள் கைவசம் உள்ளன. அதில் விக்ரமுடன் ஜோடி சேர்ந்துள்ள 10 என்றதுக்குள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதே போல் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடித்துவரும் படத்தில் முதல் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. அடுத்த சில மாதங்களில் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கும் படத்திலும், அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய்யுடன் ஜோடி சேரும் படத்திலும் நடிக்க உள்ளதால் சமந்தாவின் கால்ஷீட் பிசியாக உள்ளது.
இது தவிர ஒரு சில தெலுங்கு படங்களும் சமந்தாவின் கைவசம் உள்ளன. எனவே இவ்வருட இறுதி வரை தேதியில்லாத காரணத்தால் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக சமந்தாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.