தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கஜினி படம் மூலம் இந்திக்கு போனார். சல்மான்கான், அஜய் தேவ்கான், அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தற்போது ‘ஆல் இஸ் வெல்’ என்ற படத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மும்பை போலீசார் அசின் காரை பறிமுதல் செய்ததாக செய்தி பரவி உள்ளது.
மும்பை விமான நிலையத்தில் கார்களை நிறுத்தக்கூடாது. ‘நோ பார்க்கிங்’ பகுதியில் அசினின் எம்.எச்.02 சிஎல் 5335 என்ற எண்ணுள்ள சொகுசு கார் நிறுத்தப்பட்டு இருந்தது.
நீண்ட நேரம் அந்த கார் அங்கு நின்றதால் போலீசார் அந்த கார் டயரில் பூட்டு போட்டனர். பறிமுதலும் செய்தார்கள். காரை போலீஸ் வாகனும் மூலம் போலீஸ் நிலையத்துக்கு இழுத்து செல்ல ஏற்பாடு நடந்தது.
இதனால் காருக்குள் இருந்த அசின் தவிப்புக்கும் உள்ளானார். போலீசாரிடம் வருத்தம் தெரிவித்தார். பூட்டை கழற்றி காரை விடுவிக்கும் படி வேண்டினார். 15 நிமிடம் அங்கிருந்து வெளியேற முடியாமல் அவதிப்பட்டார். பிறகு ஒரு வழியாக காரை போலீசார் விடுவித்தனர்.