செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா டி.ராஜேந்தரும், சுசித்ராவும் இணைந்து இது நம்ம ஆளு படத்தில் பாடி உள்ளனர்டி.ராஜேந்தரும், சுசித்ராவும் இணைந்து இது நம்ம ஆளு படத்தில் பாடி உள்ளனர்

டி.ராஜேந்தரும், சுசித்ராவும் இணைந்து இது நம்ம ஆளு படத்தில் பாடி உள்ளனர்டி.ராஜேந்தரும், சுசித்ராவும் இணைந்து இது நம்ம ஆளு படத்தில் பாடி உள்ளனர்

1 minutes read

சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் இது நம்ம ஆளு, சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தயாரிக்கிறார். இப்படத்துக்கு சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைக்கிறார். பாண்டிராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது.

கும்பகோணம் பகுதியில் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது இரண்டு பாடல் காட்சிகள் பாக்கி உள்ளது. அவற்றை முடித்து விட்டு ஜூலை மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் டி.ராஜேந்தரும், சுசித்ராவும் இணைந்து ஒரு பாடலை பாடி உள்ளனர். ஏற்கனவே வல்லவன் படத்தில் இருவரும் இணைந்து பாடிய ‘‘அம்மா டி ஆத்தாடி’’ பாடல் ஹிட்டானது அது போல் இந்த பாடலும் ரசிகர்கள் வரவேற்பை பெறும் என்கின்றனர்.

அனைத்து பாடல்களையும் பிரமாதமாக உருவாக்கி இருப்பதாக குறளரசனை பலரும் பாராட்டுகின்றனர். இந்த நிலையில் பாடல் காட்சிகளை படமாக்காமல் பாண்டிராஜ் தாமதம் செய்ததாக அவர் மீது டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தின் புகார் அளித்துள்ளது. இணைய தளங்களில் செய்திகளை பரவின. அது தவறான செய்தி என டி.ராஜேந்தர் தரப்பில் மறுத்தனர்.

படவேலைகள் சுமூகமாக முடிந்துள்ளதாகவும் படத்துக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியோடு யாரோ இது போன்ற தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்றும் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More