ரசிகர்களின் பாரிய எதிர்ப்பார்ப்புடன் கே.ஜி.எப் 2.

2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியானது. ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த இப்படத்தில் யஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார்.

இப்படம் மாபெரும் வெற்றிபெற்றதோடு ஜப்பான், கொரியா முதலிய அயல் நாடுகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எப் 2ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது இப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் 23ம் திகதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆசிரியர்