விஜய் அதிகம் பேசமாட்டார்,அவருடைய செயல் நிறைவாக பேசும்:பிருந்தா மாஸ்டர்.

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்குநர் என்ற புது அவதாரத்தை எடுத்துள்ளார். ‘ஹே சினாமிக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. துல்கர் சல்மானின் அடுத்த தமிழ் படமாக இந்த படம் அமைந்துள்ளது, அவரோடு இணைந்து இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகிய இருவரும் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் தனது ட்விட்டர் தளத்தில் பல throwback புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிருந்தா, தற்போது சர்க்கார் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் பணியாற்றிய புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். விஜய் அதிகம் பேசமாட்டார் ஆனால் அவருடைய செயல் நிறைவாக பேசும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்