இந்தியன் – 2 மீண்டும் ஆரம்பம்.

நடிகர் கமல்ஹாசன் நடிக்க, ஷங்கர் இயக்கும் இந்தியன் – 2 படத்தின், ‘போஸ்ட் புரொடக் ஷன்’ பணிகள், இன்று(வியாழக்கிழமை) முதல் துவங்க உள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 3 மாதங்களாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை, பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.

இந்நிலையில் நேற்று முதல் சென்னையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால்
சின்னத்திரை படப்பிடிப்பு மற்றும் திரைப்பட இறுதிக் கட்ட பணிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்படுகின்றன.

இதில், இந்தியன் – 2 படத்தின் பணிகளை விரைந்து முடித்து, மீதமுள்ள படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன், சின்னத்திரை தொடர்கள் படப்பிடிப்பையும் நேற்று(ஜூலை 8) முதல் தொடங்க அதன் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இதனால் திரைப்பட மற்றும் சின்னத்திரை சங்க உறுப்பினர்கள் மற்றும் தினசரி பணியாளர்கள் தங்கள் பணிகளை வழக்கம்போல தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்