0
நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓட்டிக்கொண்டு இருக்கும் படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.