செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் தனுஷ் நடிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ கதாபாத்திரத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியீடு

தனுஷ் நடிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ கதாபாத்திரத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியீடு

1 minutes read

தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் என வழக்கமான அறிவிப்புகள் இல்லாமல் படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் மோஷன் போஸ்டர் வெளியீடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் தனுஷின் கதாபாத்திரத்திற்கான மோஷன் போஸ்டர் நேற்று இணையத்தில் வெளியானது.

‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இதில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் நடிகைகள் பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராசி கண்ணா ஆகியோர் ஜோடிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மூத்த நடிகர் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பிரம்மாண்டமான பொருட்செலவில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை தயாரித்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் படத்தில் நடிக்கும் முதன்மையான கதாபாத்திரங்களுக்கான தோற்றத்தை மோஷன் போஸ்டர்களாக படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள். 

பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நடிகைகள் ராசி கண்ணா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் தோற்றத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.  இதில் சாலை ஒன்றில் போக்குவரத்திற்காக காத்திருக்கும் துவி சக்கர வாகனம் ஒன்றில் பயணிக்கும் வகையில் தனுஷின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

‘கர்ணன்’ படத்தின் அசுரத்தனமான வெற்றிக்குப் பிறகு பட மாளிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்களும், திரையுலக வணிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More