புதுமை இயக்குநரும், நடிகருமான இரா. பார்த்திபன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘இரவின் நிழல்’ எனும் திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உலகின் முதன் முதலாக நான் லீனியர் பாணியில் சிங்கிள் ஷாட் மூவியாக உருவாகி இருக்கிறது ‘இரவின் நிழல்’. இப்ப படத்தின் உருவாக்கம் குறித்து சாதாரண திரை ஆர்வலர்களிடத்திலும் பல சந்தேகங்கள் இருக்கிறது. சிங்கிள் ஷாட் மூவி என்பதற்கும், நான் லீனியர் பாணியிலான சிங்கிள் ஷாட் மூவி என்பதற்கும் இடையேயான குழப்பத்தை இந்த திரைப்படம் வெளியான பிறகுதான் பலருக்கும் தீரும் என திரையுலகினரே தெரிவிக்கிறார்கள்.
இதற்காக இயக்குநர் பார்த்திபன் பட வெளியிட்டுக்கு முன்னதாக, இந்த படம் உருவாக்கம் குறித்து 40 நிமிடம் ஓடக்கூடிய ‘உருவாக்க காணொளி’யை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். அவரது இந்த முயற்சி படத்தை முதல் நாளில் முதல் காட்சியிலேயே பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் என படக் குழுவினர் உறுதியாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இந்த தருணத்தில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் – வரலட்சுமி சரத்குமார்- அந்தோணி சாமி – ஆர்தர் வில்சன் – ‘இசை புயல்’ ஏ. ஆர். ரகுமான் ஆகியோரின் கூட்டணி மற்றும் ஒத்துழைப்பில் தயாராகி இருக்கும் ‘இரவின் நிழல்’ பல்வேறு தடைகளை கடந்து திரையுலக வணிகர்களின் ஆதரவுடன் ஜூலை 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘இரவின் நிழல்’- பார்த்திபனின் கற்பனை படைப்பாக இருந்தாலும், ஒஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசையுடன் உருவாகி இருப்பதால் ரசிகர்கள் ‘இரவின் நிழலை’ காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.