செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா செந்திலுக்கு விழுந்த உதை

செந்திலுக்கு விழுந்த உதை

1 minutes read

பிரபல காமடி நடிகர் செந்திலின் வாழ்வில் நடந்த மறக்க முடியாத நிகழ்வைக் குறித்து நடிகர் காதல் சுகுமார் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

“எனது முதல் திரைப்படமான “காதல் சாதி”யில் செந்தில் அண்ணன் பேரனாக நடித்திருந்தேன். அப்போது அண்ணனிடம் எதாச்சும் பேசிக்கொண்டே இருப்பேன்.

“அண்ணே எல்லாரையும் சிரிக்க வைக்கிற உங்கள சங்கடப்படுத்துற மாதிரி எதாச்சும் இருக்காண்ணே?”… என்று கேட்டபோது ரொம்ப வருசத்துக்கு முன்னால பொள்ளாச்சிப் பகுதியில் ஒரு படப்பிடிப்பு நடக்கும்போது ஏகப்பட்ட கூட்டம் வேடிக்கை பார்க்க கூடியிருந்துச்சி… ஒரு மேடான பகுதியில நான் தரையில ரிலாக்ஸா உக்காந்துட்டு இருந்தேன். திடீர்னு கூட்டத்துல ஒருத்தன் முதுகுல உதைச்சிட்டான்.. நிலைகுலைஞ்சி மேட்டுல இருந்து உருண்டு கீழ விழுகிறேன்.. கூட்டத்துல கொஞ்சபேரு கைதட்டி சிரிக்கிறாங்க.. ஊர்மக்களும் படத்துல வேலை செஞ்சவங்களும் அவனை பிடிச்சி ரெண்டு போடுபோட்டு ஏண்டா இப்டி பண்ணேன்னு கேட்டா…
” படத்துல கவுண்டமணி உதைச்சா அண்ணே வலிக்காத மாதிரி நடிக்கிறாரு.. நான் உதைச்சாலும் அப்டித்தான் பண்றாரான்னு பார்த்தேன்னு சொல்லவும்.. அவனை திட்டி மன்னிப்பு கேட்க வைக்க அடிக்கவே ..
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் அவனை விட்ருங்க தெரியாம ஏதோ பண்ணிட்டான்” என்று கூறியிருக்கிறார். அந்த மனதுதான் செந்தில் அண்ணன்.!!” என்று அவர் தன் பதில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பொது இடங்களில் சூட்டிங்கின் போது பல சங்கடங்கள் நடிகர் நடிகைகளுக்கு நேரும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More