தமிழ் சினிமா இயக்குனர்கள் மத்தியில் பாலாவின் படைப்புகள் எப்போதுமே தனித்து தெரியும். இவர் படங்களை பார்ப்பதற்கே ஒரு மன தைரியம் வேண்டும்.
இவருடைய படத்தில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் தெரியும் கிளைமாக்ஸ் காட்சியில் அழவைக்கவும் தெரியும் தற்போது இவர் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்களை பார்க்கலாம் வாங்க..
சேது
நடிகர் விக்ரம் சினிமாவில் முட்டி மோதி ஓடிக்கொண்டிருந்த காலத்தில் சேது திரைபடத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்தார். பாலா எழுதி இயக்கியிருந்த இந்த படத்தை இளையராஜா இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் அபிதா, சிவகுமார், ஸ்ரீமன், மோகன் வைத்யா , பாரதி எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். கடந்த 1999ம் ஆண்டு வெளியான இப்படம் விக்ரம் வாழ்க்கையில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.
நந்தா
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2001 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நந்தா. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து லைலா, ராஜ்கிரண், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் சூர்யாவின் திரை வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமாகும். இப்படத்தில் சூர்யா ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்து காட்சிகளிலும் கலக்கியிருப்பார்.
பிதாமகன்
நந்தா படத்திற்கு பின் பாலா இயக்கிய திரைப்படம் தான் பிதாமகன். இதில் முக்கிய கதாபாத்திரங்களில், தனது முந்தைய படங்களில் லீட் ரோல் செய்த விக்ரமும் சூர்யாவும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.
இப்படத்தில் நடித்த விக்ரம் நடிப்பிற்காக தேசிய விருதினை வென்றார். பிதாமகன் படத்தில் நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் என இரண்டுமே அருமையாக இருக்கும்.
நான் கடவுள்
கடந்த 2009 -ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் நான் கடவுள். இப்படத்தில் ஹீரோவாக ஆர்யா நடித்திருப்பார், மேலும் முக்கியமான ரோலில் பூஜா, மொட்டை ராஜேந்திரன் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை அடிப்படையாக் கொண்டு நான் கடவுள் திரைப்படம் எடுக்கப்பட்டது. முதல் முதலில் நான் கடவுள் படத்தில் அஜித் தான் நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணத்தால் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.
நன்றி : சினிஉலகம்.காம்