செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் தர்ஷன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் தர்ஷன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு

0 minutes read

‘கனா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, அஜித் குமாரின்  ‘துணிவு’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தர்ஷன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராஜ்வேல் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தர்ஷன், அர்ஷா பைஜூ , கலையரசன், தீனா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ராஜேஷ் முருகேசன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை பிளே ஸ்மித் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகவும், விரைவில் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்க இருப்பதாகவும், அதன் பிறகு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More