திரைப்படங்களையும், திரைத்துறை கலைஞர்களையும் பெருமைப்படுத்தி, அங்கீகாரம் கொடுக்கும் நிகழ்வாக தேசிய விருது வழங்குதல் நடைபெறுகிறது. இதில், 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 70வது தேசிய விருதுகள் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த விருதினை பெருபவர்களுக்கு விருதைத்தாண்டி, ஒரு பரிசுத்தாெகையும் வழங்கப்படுகிறது. அது எவ்வளவு பெரிய தொகை தெரியுமா?
தமிழ் படங்களுக்கு விருது..
இதற்கு முன்னர் பல தமிழ் படங்கள் தேசிய விருதுகளை பெற்றிருக்கின்றன. அந்த வகையில், இந்த வருடமும் சில தமிழ் படங்கள் தேசிய விருதுகளை பெருகின்றன. குறிப்பாக, இரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு மட்டும் 4 விருதுகள் கிடைத்திருக்கின்றன. சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிப்பதிவு ஆகியவை அந்த விருதுகள் ஆகும்.
சிறந்த படத்திற்கான விருதினை மணிரத்னம் பெற, இசைக்கான விருதை ஏ.ஆர் ரஹ்மான் பெருகிறார். இப்படம் நான்கு விருதுகளை பெறவுள்ளதை அடுத்து, பலர் இப்படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதே போல, திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கிறது. மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இவருக்கு, இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது கிடைத்திருக்கிறது. அதே போல, இப்படத்தில் இடம் பெற்றிருந்த “மேகம் கருக்காதா..” பாடலுக்காக சிறந்த நடன இயக்குநருக்கான விருதும் கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜனி மாஸ்டர் மற்றும் சதீஷ்குமார் கிருஷ்ணன் நடன இயக்குநர்களாக இருந்தனர். இப்படம், வரவேற்பை பெற்றது போல, இந்த நடனமும் ரீல்ஸ்கள் மற்றும் பிற சமூக வலைதளங்கள் மூலமாக ட்ரெண்டானது.
இரு பிரிவுகளில் விருதுகள்:
தேசிய விருதுகள், இரு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. ஒன்று, ஸ்வர்ண கமல் அல்லது கோல்டன் லோட்டஸ் என்ற பிரிவாகவும், இன்னொன்று ரஜத் கமல் என்றும் கூறப்படுகிறது. இதில், இரு பிரிவுகளுக்கும் வெவ்வேறு வகையிலான பரிசு தொகைகள் வழங்கப்படுகின்றன. இதைக்கேள்வி பட்டவர்கள், விருது மட்டுமன்றி பரிசுத்தொகையுமா? என்று வாய்பிளந்து வருகின்றனர்.
பரிசுத்தொகை:
ஸ்வர்ண கமல் வகை விருதுகள்-இதற்கு பரிசுத்தொகை ரொக்கமாக ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. வெற்றியாளர்கள் யார்?
>சிறந்த திறைப்படத்திற்கான விருது-ஆட்டம்-இயக்குநர் ஆனந்த் ஏகர்ஷி விருதினை பெறுகிறார்.
>இயக்குநரின் சிறந்த அறிமுகப்படம் – பௌஜா-பிரமோத் குமார் விருதை பெறுகிறார்
>சிறந்த பிரபலமான படம் – காந்தாரா- ரிஷப் ஷெட்டி விருதினை பெறுகிறார்
>சிறந்த இயக்கம்-உஞ்சாய் படத்திற்காக சூரஜ் பர்ஜாத்யா விருதினை பெறுகிறார்
ரஜத் கமல் விருதுகள்-இதன் பரிசுத்தொகை மொத்தம் 2 லட்சம் ரொக்கம். வெற்றி பெற்றவர்கள் யார் யார்?
>முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி
>முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகை – நித்யா மேனன் மற்றும் மானசி பரேக்
>சிறந்த துணை நடிகர் – பவம்ன் ராஜ் மல்ஹோத்ரா
>சிறந்த துணை நடிகை – நீனா குப்தா
>சிறந்த குழந்தை பாத்திரம் – ஸ்ரீபத்
>சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) – அரிஜித் சிங்
>சிறந்த பின்னணி பாடகி (பெண்) – பாம்பே ஜெயஸ்ரீ
>சிறந்த ஒளிப்பதிவு : ரவிவர்மன்
>சிறந்த இசை : பிரதீம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான்
நன்றி : zeenews.india.com