செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படப் பாடலுக்கான காணொளி வெளியீடு

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படப் பாடலுக்கான காணொளி வெளியீடு

1 minutes read

பான் இந்திய நட்சத்திர நடிகரான துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லக்கி பாஸ்கர்’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கொல்லாதே’ எனும் பாடலும், பாடலுக்காக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லக்கி பாஸ்கர்’ எனும் திரைப்படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ஹைபர் ஆதி, சூர்யா சீனிவாஸ், குழந்தை நட்சத்திரம் ரித்விக்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 31 ஆம் திகதி தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கொல்லாமல் கொல்லாதே..’ எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

இந்தப் பாடலில் ஜீவி பிரகாஷ் குமாரின் மயக்கும் மெல்லிசை மெட்டும் … பாடல் வரிகளும்…  துல்கர் சல்மான் மற்றும் மீனாட்சி சவுத்திரியின் கவர்ந்திழுக்கும் திரை ரசாயனமும்… ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More