செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சாதனை படைத்து வரும் நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ பட முன்னோட்டம்

சாதனை படைத்து வரும் நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ பட முன்னோட்டம்

1 minutes read

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான துல்கர் சல்மான் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘லக்கி பாஸ்கர்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லக்கி பாஸ்கர்’ எனும் திரைப்படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ஆயிஷா கான், ஹைபர் ஆதி, சாய் குமார், சச்சின் கடேகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

எதிர்வரும் 31 ஆம் திகதி தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் கதையின் நாயகனான துல்கர் சல்மான்-  தன்னை விரும்பும் நாயகியை திருமணம் செய்து கொண்ட பிறகு பொருளாதார சிக்கலுக்கு ஆளாகிறார்.

அதிலிருந்து தப்பிப்பதற்காக சூதாட்டம் மற்றும் நிதி மோசடிகளில் சாமர்த்தியமாக ஈடுபடுகிறார். இதனால் ஏற்படும் விளைவுகள் தான் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More