செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஜெயம் ரவி நடிக்கும்’ பிரதர் ‘படத்தின் பாடலுக்கான காணொளி வெளியீடு

ஜெயம் ரவி நடிக்கும்’ பிரதர் ‘படத்தின் பாடலுக்கான காணொளி வெளியீடு

1 minutes read

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிரதர் ‘ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மிதக்குது காலு ரெண்டு..’ என தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ எனும் திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், நட்டி என்கிற நட்ராஜ், பூமிகா சாவ்லா, வி டிவி கணேஷ், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, எம். எஸ். பாஸ்கர் , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விவேகானந்த சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.

தீபாவளி திருநாளான ஒக்டோபர் 31ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மக்கா மிஷி..’ எனும் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மிதக்குது காலு ரெண்டு.’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியை பார்வதி மீரா எழுத, பின்னணி பாடகி மது ஸ்ரீ பாடியிருக்கிறார்.

திருமண வைபவ கொண்டாட்டத்தின் பின்னணியில் உற்சாகத்துடன் ஒலிக்கும் இந்தப் பாடல் இனி அனைத்து திருமண நிகழ்வுகளிலும் நடனத்துடன் ஒலிக்கும் என கூறலாம்.‌

இந்த பாடலும் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More