குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா.தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதையடுத்து குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். தற்போது இவரின் 50-வது படமான ‘மஹா’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நடிகை ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஹன்சிகா வீட்டில் திருமண ஏற்பாடுகள் களைகட்டி வருகிறதாம். ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, வருகிற மார்ச் 20-ந் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்குள்ள அரண்மனையை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்களாம். அங்கு திருமண நிகழ்ச்சிகள் 2 நாட்கள் நடைபெற உள்ளதாம்.