செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

0 minutes read

புதுமுக நடிகர் ஹரிபாஸ்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் ‘ எனும் திரைப்படத்தில் ஹரி பாஸ்கர் , லொஸ்லியா, இளவரசு, ஷா ரா, ரயான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

குலோத்துங்கவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஓஷோ வெங்கட் இசையமைத்திருக்கிறார்.

நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராமசாமி மற்றும் நித்தின் மனோகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் நாயகன்  நாயகி பணியாற்றும் அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்கிறார். அவருக்கும் , நாயகிக்கும் இடையே ஏற்படும் உறவும், உறவு கடந்த காதலும் காட்சியாக அமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More