Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் வெண்டிக்காய் மோர் குழம்பு

வெண்டிக்காய் மோர் குழம்பு

2 minutes read

தேவையான பொருட்கள்:

தயிர் – 1 கப்

வெண்டிக்காய் – 100 கிராம்

மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்  – 2

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு, உளுந்தம் பருப்பு – 1 சிறிதளவு

கருவேப்பிலை – சிறிது

சீரகம் – 1 தேக்கரண்டி

தேங்காய் – கால் மூடி

பொட்டுக்கடலை – 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லி – சிறிது

தாளிக்க வேண்டிய பொருட்கள்:

எண்ணெய்

கடுகு, உளுந்தம் பருப்பு

கருவேப்பிலை

சீரகம்

அரைக்க வேண்டிய பொருட்கள் :

தேங்காய்

பொட்டுக்கடலை

செய்முறை:

  • முதலில் வெண்டிக்காயை வெட்டிக் கொள்ளவும்.
  • பின்னர் மஞ்சள் தூளையும் தயிரையும் மிக்ஸ் செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • அதன் பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அத்துடன் வெட்டி வைத்துள்ள பச்சை மிளகாய், வெண்டிக்காய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  • வதக்கிய பின்பு மிக்ஸ் செய்து வைத்த தயிரை ஊற்றவும்.
  • அத்துடன் அரைத்து வைத்த தேங்காய் மசாலாவையும் சேர்க்கவும்.
  • பின்னர் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் வைத்து இறக்கவும்.
  • வெண்டிக்காய் மோர் குழம்பு தயார்.

இதை சோறுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

சுவஸ்த்திக்கா ரெங்கராஜ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More