Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் இனிப்பு இட்லி

இனிப்பு இட்லி

1 minutes read

தேவையான பொருட்கள்:

அரிசி –  2 கப்

உளுந்து – அரை கப்

தூளாக்கிய கருப்பட்டி – ஒரு கப்

ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன்

தேங்காய் துருவல் – கால் கப்

நெய் – 2 டேபிள்ஸ்பூன்

அப்பசோடா – ஒரு சிட்டிகை.

செய்முறை:

*
அரிசி, உளுந்தை தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

*உளுந்தை பொங்கப்பொங்கவும், அரிசியை மைபோலவும் அரைத்து, துளி உப்பு சேர்த்துப் புளிக்கவையுங்கள்.

*
நன்குபுளித்த மாவில், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலக்குங்கள்.

*
கருப்பட்டியை கால் கப் தண்ணீர் வைத்துக் கரையவிட்டு, வடிகட்டி, சூடாக அப்படியே மாவில்சேருங்கள்.

*இதை நன்கு கலந்து, இட்லிகளாக ஊற்றி, வேகவைத்தெடுங்கள். மிகவும் சுவையானஇட்லி

குறிப்பு :

மா அரைக்கும்போது, கெட்டியாக இருக்கவேண்டும். ஏனெனில், கருப்பட்டிப் பாகு சேர்த்ததும் மாவு நீர்த்துக்கொள்ளும். கருப்பட்டி கிடைக்காத பட்சத்தில் வெல்லத்தூள் சேர்த்தும்செய்யலாம்.

சுவஸ்த்திக்கா றெங்கராஜ்,

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More