தேவையான பொருட்கள்:
காளான் – 1/4 கிலோ
பூண்டு விழுது – 1 டீஸ்பூண்
பச்சை மிளாகாய் விழுது – 2 டீஸ்பூண்
தயிர் – 2 டேபிள் ஸ்பூண்
ஆம்ச்சூர் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
காளான்களை நான்காக நறுக்கி கழுவி எடுத்துக் கொள்ளவும். தயிரில் விழுதுகள், ஆம்ச்சூர், உப்பு ஆகியவற்றை நன்கு கலந்து இக்கலவையில் காளான்களைக் கலக்கி 30 நிமிடம் ஊற விடவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி இதில் ஊறிய காளன்களைத் தண்ணீர் வற்றும் வரையிலும் நன்கு வதக்கவும். இக்கறியினை சப்பாத்தி, சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
நன்றி -தினகரன்