பாதாம் மூஸ் செய்ய தேவையானவை:
நறுக்கிய பாதாம் – 45 கிராம்,
பாதாம் பால் – 150 மிலி,
வைட் சாக்லெட் – 425 கிராம்,
பேக்கரி கிரீம் – 400 மிலி,
முட்டை மஞ்சள் கரு – 5,
சர்க்கரை – 50 கிராம்,
குங்குமப்பூ – 1/2 கிராம்,
ஏலக்காய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
அடுமனை பக்குவம்:
மைக்ரோ அவனை 180 டிகிரியில் பிரீ ஹீட் செய்து, அதில் நறுக்கிய பாதாமினை நான்கு நிமிடம் ரோஸ்ட் செய்யவும். பாதாம் பாலை சூடாக்கவும். வைட் சாக்லெட்டை சேர்த்து திக்கான பதம் வந்ததும் இறக்கவும். குங்குமப்பூ, ஏலக்காய்த் தூள் தூவி, முட்டையின் மஞ்சள்கரு மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு அடிக்கவும். பேக்கரி கிரிமையும் தனியாக நன்கு அடிக்கவும். இதில் முட்டை சர்க்கரை கலவை, சாக்லெட் கலவை அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை சின்ன சின்ன கப்களில் ஊற்றி பிரிட்ஜில் வைக்கவும். கெட்டியான பதம் வந்தவுடன் அதன் மேல் பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.
நன்றி-தினகரன்