தேவையான பொருட்கள்
புளிக்காத இட்லி மாவு – 2 கப்,
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கேரட் – 100 கிராம்,
பீன்ஸ் – 50 கிராம்,
பீட்ரூட் – 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
வேகவைத்து மசித்த பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிது.
செய்முறை
புளிக்காத இட்லி மாவில் கேரட், பீன்ஸ், கொத்தமல்லித்தழை, பீட்ரூட், மசித்த பட்டாணி, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்கு கரைத்துக் கொள்ளவும்.
இட்லி பானையில் தண்ணீர் சேர்த்து, கரைத்த மாவை இட்லி தட்டில் உள்ள குழியில் ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் வெஜிடபிள் இட்லி ரெடி.
இந்த இட்லியுடன் தக்காளி சட்னி அல்லது வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: கீரையைப் பொடியாக நறுக்கி இட்லி மாவில் சேர்த்து கீரை இட்லி செய்யலாம்.
நன்றி | மாலை மலர்