செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சிக்கன் போண்டா

சிக்கன் போண்டா

2 minutes read

தேவையான பொருட்கள் :

சிக்கன் கைமா – கால் கிலோ,

சின்ன வெங்காயம் – 50 கிராம்,

போண்டா மாவு – 250 கிராம்,

சிக்கன் மசாலா – 3 டேபிள்ஸ்பூன்,

மஞ்சள்தூள் – அரை டேபிள்ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 2,

பூண்டு – 5 பல்,

கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,

சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,

மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,

தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு,

பொட்டுக்கடலை – 50 கிராம்,

இஞ்சி – 2 சிறிய துண்டு,

கொத்தமல்லித் தழை – சிறிதளவு.

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

  • சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு கிண்ணத்தில் போடவும்.
  • அத்துடன் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  • முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • போண்டா மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.
  • அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
  • சூப்பரான சிக்கன் போண்டா ரெடி.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More