செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

1 minutes read

தேவையான பொருட்கள்

பச்சை பட்டாணி – 1 கப்,

கேரட் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்,

தேங்காய்த்துருவல் – 3 டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவைக்கு.

தாளிக்க

எண்ணெய் – 2 டீஸ்பூன்,

கடுகு – 1 டீஸ்பூன்,

வெள்ளை உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,

பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,

வரமிளகாய் – 2, கறிவேப்பிலை – 6 இதழ்கள்.

மேலே தூவுவதற்கு

அரிந்த கொத்தமல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

பச்சை பட்டாணியை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும்.

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த பட்டாணியைச் சேர்த்து வதக்கி கேரட் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கொத்தமல்லித்தழை தூவி கலந்துவிடவும்.

இப்போது சூப்பரான பட்டாணி கார சுண்டல் ரெடி.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More