0
தேவையான பொருட்கள்:
பன்னீர் – 300 கிராம்
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/4 கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
புதினா – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
பேக்கிங் சோடா/சமையல் சோடா – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
- வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
- ஒரு பௌலில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதனுடன் மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு நீரை ஊற்றி போண்டா பதத்திற்கு ஓரளவு கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
- பின் அதில் பன்னீர் துண்டுகள், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை சிறிது சிறிதாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பன்னீர் போண்டா தயார்.
- அதை காரச்சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
நன்றி | மாலை மலர்