0
பாண், ரொட்டி, தோசை.. இப்படி பல உணவுகளுக்கு ஜாம்தான் சிறுவர்களின் முதல் தெரிவாக இருக்கும் .நாமே வீட்டில் சுவையான, சத்தான பழங்களில் ஜாம் தயாரிக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று அன்னாசி பல ஜாம் செய்வது எப்படியென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முற்றிப் பழுத்த அன்னாசி – 1
ஓரளவான தக்காளிப் பழம் – 4
பிரவுன் சுகர் – 500 கிராம்
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
ப்ளம்ஸ் – 50 கிராம்
செய்முறை:
- அன்னாசிப் பழத்தின் தோலை சீவி நடு தண்டை அகற்றி சின்னதாக வெட்டி அரைத்துக்கொள்ளவும்.
- தக்காளிப் பழத்தை கொதி நீரிட்டு மூடி வைத்து தோலுரித்து அதனையும் அரைத்துக்கொள்ளவும்.
- அடி தடிப்பான பாத்திரத்தில் இரண்டையும் கலந்து வற்றக் காய்ச்சவும்.
- நன்றாக வற்றியதும் சீனியை இட்டு வற்ற விடவும். அடித்தடிப்பான பாத்திரமென்றால் அடிக்கடி கிளர தேவைப்படாது.
- நன்றாக இருகி வரும் போது நட்ஸ், பிளம்ஸ் தூவி சிம்மில் வைக்கவும்.
- அன்னாசிப் பழ ஜாம் தயார்…
நன்றி | வவுனியா நெற்